விளையாட்டு

CWC – பிரபல பாகிஸ்தான் அணியை இலகுவாக வீழ்த்திய இந்தியா

உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

எனினும், இவர்கள் முறையே 20 மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தார்.

எனினும், 50 ரன்களில் ஆடிய போது முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை சேர்த்தது. இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். அதிரடியாக விளையாடிய இவர் 63 பந்துகளில் 86 ரன்களை குவித்து அசத்தினார்.

இவருடன் ஆடிய சுப்மன் கில் 16 ரன்களிலும், அடுத்து வந்த விராட் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் இந்திய அணி 30.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது.

போட்டி முடிவில் ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களிலும், கே.எல். ராகுல் 19 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content