சமூக பிரச்சினைகளை தன் பாட்டில் அடக்கும் இலங்கையின் சிறந்த பாடகர் சிவி லக்ஷ்

மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அந்த கனவை நோக்கி ஓடும் அனைவரும் பல தடைகளை பார்த்திருப்பார்கள்.
அனைத்து தடைகளையும் தவிடுபொடியாக்கி சாதித்துக்காட்டியவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
அந்த வகையில் நம்நாட்டு இளைஞர் யுவதிகளிடமும் பல திறமைகள் உள்ளன. அந்த திறமைகளை வெளிக்கொண்டுவரும் பலரும் சாதனையாளர்கள் தான்.
தமக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வரை அவர்கள் கட்டாயம் போராடத்தான் வேண்டும். போராடி தோற்றவர்கள் உலகில் இல்லை என்றே கூறலாம்.
இவ்வாறு வெற்றி கண்டவர்களில் ஒருவர்தான் இலங்கை ராப் பாடகர் சிவி லக்ஷ் (CV Laksh). இவரை செல்லமாக “சொல்லிசைப் பொடியன்” என்று அழைப்பார்கள்.
இவர் பாடும் பாடல்களில் முக்கியமான கருத்துக்கள் காணப்படும். குறிப்பாக சமூக நிகழ்வுகள், பிரச்சனைகள் குறித்து பாடல்களை பாடுகிறார். சமூக விழிப்புணர்வுடன் கூடிய பாடல்களை பாடுவதில் கைதேர்ந்தவர்.
இவர் தன்னைச்சுற்றி நடப்பவற்றை அந்த இடத்தில் வைத்து உடனடியாக பாடலை இயற்றி பாடும் திறமைவாய்ந்தவர்.
மேலும், குவியம் வழங்கும் 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த ராப் பாடகருக்கான விருது இவருக்கு கிடைத்தது.
இப்போதும் பல இடங்களுக்குச் சென்று சமூக விழிப்புணர்வூட்டும் பாடல்களை பாடிவரும் சிவி லக்ஷ் என்ற இளைஞருக்கு எமது வாழ்த்துக்கள்…