பொழுதுபோக்கு

CSK போட்டியால் “ஓவர் நைட்டில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ்” ஆகிய நம்ம வாசு…

விஜய் டிவியில் ஒளிபரப்பான `தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் வசுவாக நடித்து கவனம் ஈர்த்தவர் தர்ஷ்னா.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `பூவா தலையா’ தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே Vs பஞ்சாப் ஐபிஎல் போட்டியைக் காண சென்ற இவர் தான் இன்றைய சமூகவலைதளப் பக்கங்களின் வைரல் ஸ்டார்.

விளையாட்டின் இடையில் காட்டப்பட்ட இந்த முகம் யாருடையது?? என்றும், இவர் வெள்ளித்திரையில் இருக்க வேண்டியவர் என்றும் பல பதிவுகள் இவரைச் சுற்றி வந்துகொண்டு இருக்கின்றன.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“சத்தியமா இந்த அளவுக்கு ட்ரெண்ட் ஆகும்னு எதிர்பார்க்கல. எனக்கு கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். சிஎஸ்கே என்னுடைய ஃபேவரைட். கடந்த சிஎஸ்கே Vs லக்னோ மேட்ச் பார்க்கப் போயிருந்தேன். அந்த மேட்ச் நாம தோத்துட்டோம். அதனால நேற்று போகும்போது மேட்ச் கண்டிப்பா வின் பண்ணிடுவோம் என்கிற நம்பிக்கையில் போனேன்.

தொடர்ந்து டைம் இருந்தா கண்டிப்பா மேட்ச் பார்க்கப் போவேன்!” என்றார்.

முதலில் அறிமுகமாகும் படம் நல்ல கதையாக அமையணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். கண்டிப்பா எல்லாம் கை கூடினால் நிச்சயம் வெள்ளித்திரையிலும் என்னைப் பார்க்கலாம்.

இப்ப வரைக்கும் என்னை எங்கப் பார்த்தாலும் `வசு’வாகத்தான் அடையாளம் கண்டுபிடிக்கிறாங்க. கதை, கதாபாத்திரம்னு எல்லாம் நல்லா அமைஞ்சா நிச்சயம் வெள்ளித்திரையிலும் பார்க்கலாம்!” என்றார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!