புதிய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

சர்வதேச கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன் இஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளார்.
இவர் பிரபல வீரர் மற்றும் திறமையான ஆட்டக்காரர் என்பதால் உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்கள் அவரை பாலோ செய்து வருகின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு 500 மில்லியன் பாலோயர்களை கொண்டிருந்த ரொனால்டோ, தற்போது 600 மில்லியன் பாலோயர்களை எட்டியுள்ளார்.
இவர் இன்ஸ்டாவில் பதிவிடும் 1 பதிவுக்கு ரூ.26கோடி வருமானம் வருவதாக தகவல் வெளியாகிறது.
இவர் போர்ச்சுக்கல் தேசிய அணிக்காக விளையாடி வரும் நிலையில், அல் நாசர் அணியின் கிளப்புக்காக 200 மில்லியன் டாலர் என்ற அதிக தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகிறார்.
(Visited 10 times, 1 visits today)