இலங்கை செய்தி

இலங்கையில் தொடரும் நெருக்கடி – பல பிரதேசங்களில் மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு

இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினத்துக்குள் சுமார் 70,000 மெட்ரிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்பட்டது.

இருந்த போதும் இதுவரை 26,000 மெட்ரிக் தொன் அரிசி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது

அத்துடன் உள்நாட்டு அரிசி உற்பத்தியாளர்களும் போதுமான அளவில் நாட்டரிசியை சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சம்பா, கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே நேற்றைய தினம் முடிவடைய இருந்த அரிசி இறக்குமதிக்கான கால எல்லையை அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் நீடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை