வரி ஏய்ப்பு வழக்கு… எஸ்.ஜே. சூர்யாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெத்தியடி படம் மூலமாக கேமரா முன்பு தோன்றிய எஸ்.ஜே. சூர்யா இப்போது மாஸ் வில்லன்களில் ஒருவராக எல்லா மொழிகளிலும் கலக்கி வருகிறார்.
இந்த நிலையில் தான் வருமானத்திற்குரிய வரியை செலுத்தாத நிலையில் அவர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். அதுவும் எஸ்.ஜே சூர்யா கிட்டத்தட்ட 8 கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்.
இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கை எதிர்த்து எஸ்.ஜே சூர்யா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது.
இதில், எஸ்ஜே சூர்யா மேல்முறையீட்டு மனுவை உரிய காலத்திற்குள்ளாக தாக்கல் செய்யவில்லை. அவர் 467 நாட்கள் தாமதமாக தனது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதனால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளமாட்டாது என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். இனிமேலும் அவர் மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது.
அதனால் எஸ்ஜே சூர்யா வரி ஏய்ப்பு செய்ததாக சொல்லப்படும் 7 கோடியே 57 லட்சத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.