ஜாய் கிரிசில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மாதம்பட்டி ரங்கராஜின் பாகசாலா நிறுவனங்களை டேக் செய்து ஜாய் கிரிசில்டா பதிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
வழக்கு விசாரணையின் போது மாதம்பட்டி பாகசாலா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஜாய் கிரிசில்டாவின் இந்த பதிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் வரை கிட்டத்தட்ட ரூ.12 கோடி மதிப்பிலான கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகிவிட்டதாகவும், அதனால் அவருடைய சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனங்களை தொடர்புபடுத்தி கருத்துக்கள் தெரிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
அதேபோல் ஜாய் கிரிசில்டா தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், இந்த சமூக வலைதள பதிவுகளால், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை பற்றியோ, அவர்களுடைய வர்த்தக நடவடிக்கை பற்றியோ எதுவும் சொல்லவில்லை.
அப்படி இருக்கையில் எப்படி 12 கோடி இழப்பு ஏற்பட்டது என்பது குறித்த விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தானதற்கும் ஜாய் கிரிசில்டாவின் கருத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் வாதங்களை முன்வைத்து இருந்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதன்படி ஜாய் கிரிசில்டாவின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாதம்பட்டி பாகசாலா, தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்.





