பிலிப்பைன்ஸில் ஊழல் மோசடி – 07 அதிகாரிகள் கைது!
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ள பேரிடரை தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் வெள்ள கட்டுப்பாடு தொடர்பாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வறுமையில் வாடும் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில், வெள்ள கட்டுப்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய ஊழல் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபையின் முன்னாள் உறுப்பினரான சால்டி கோ (Zaldy Co) மற்றும் அரசாங்க பொதுப்பணி பொறியாளர்கள் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சிறப்பு ஊழல் எதிர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைகளை தொடர்ந்து அவர்களை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




