கொரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட நோய்க்கிருமி – வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட நோய்க்கிருமி என்பதை உறுதிப்படுத்தும் புதிய வலைத்தளத்தை வெள்ளை மாளிகை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவிட்-19 வைரஸ் என்பது சீனாவின் வுஹானில் உள்ள ஒரு தொற்று நோய் ஆய்வகத்திலிருந்து கசிந்த ஒரு நோய்க்கிருமி என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த வலைத்தளம் கோவிட்-19 தொற்றுநோயின் தோற்றம் குறித்த நீண்ட விவாதத்தை மீண்டும் எழுப்பும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது கூட்டாட்சி நிறுவனங்கள், உலகளாவிய சுகாதார அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் குழுக்களால் விசாரிக்கப்படுகிறது.
எனினும் வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டறிய போதுமான தகவல்கள் தங்களிடம் இல்லை என்று சிஐஏ முன்பு கூறியிருந்தது.
வுஹான் சந்தையில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவியதாக ஏற்கனவே தகவல் உள்ளது.
ஆனால், இயற்கையில் காணப்படாத ஒரு உயிரியல் பண்பு இந்த வைரஸுக்கு இருப்பதாக ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.