ஆஸ்திரேலியாவில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – அமுலாகும் கட்டுப்பாடு
ஆஸ்திரேலியாவில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சாதனை அதிகரிப்புடன், நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் துறைகள் மீண்டும் முகக் கவசம் அணியுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 11 சதவீதத்திற்கும் அதிகமானவை கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டது.
அவர்களில் பெரும்பாலானோர் சிறு குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது, சரியான இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை கழுவுவது உள்ளிட்ட பாதுகாப்பு உத்திகளை எப்போதும் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சளி அல்லது காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருந்தால், முடிந்தவரை வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுவதன் மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.
ஆஸ்திரேலியாவில் பரவும் நோய்களின் பட்டியலிலிருந்து கோவிட்-19 நீக்கப்பட்டதன் மூலம், வைரஸ் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவு சேகரிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது, இதன் காரணமாக, நோய் பரவுவதில் கவனம் குறைவாக உள்ளது.