லியோ வசூலை பின்னுக்கு தள்ளி மைல்கல் சாதனை படைத்த கூலி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 151 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழ் சினிமாவில் முதல் நாளில் மிகப்பெரிய ஓபனிங் சாதனையை படைத்த படமாக இருந்தது.
அந்த சாதனையை தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75 வயதிலும் அடித்து நொறுக்கி அசால்ட்டு காட்டியிருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தற்போது கூலி படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கூட முதல் நாளில் 100 கோடி வசூலை எட்டாத நிலையில், கூலி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் உலகளவில் 151 கோடி என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 148 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் உலகளவில் ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது. அந்த வசூல் சாதனையை கோட் திரைப்படம் கூட முதல் நாளில் முறியடிக்க முடியவில்லை. 120 கோடி அளவில் தான் வசூல் வந்தது.
இந்நிலையில், லியோவின் 148 கோடி சாதனையை கூலி திரைப்படம் முறியடித்து தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க் படமாக மாறியிருக்கிறது.