கூலி ஆட்டம் 10 நாள் மட்டுமே… லியோ ரெக்கார்டை உடைத்த தேவா

கூலி படத்தை நாளை கேரளாவில் காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிட உள்ளனர். இங்கே தமிழ் நாட்டில் ஒன்பது மணிக்கு தான் முதல் காட்சி. அதைப்போல் அமெரிக்கா போன்ற இடங்களில் இந்திய நேரப்படி காலை 4 மணிக்கு திரையிட உள்ளனர்.
ஏற்கனவே வெளிநாடுகளில் முன் பதிவு மூலம் 15 கோடிகள் வசூலித்துள்ளது கூலி. நாளை லோகேஷ், ரஜினிகாந்த் கூட்டணிக்கு வெற்றியா தோல்வியா என்பது தெரிந்துவிடும். கூலி படத்தால் இந்த மாதம் ரிலீஸ் அறிவித்திருந்த 6 படங்கள் பின்வாங்கியுள்ளது.
கேரளாவில் இதுவரை லியோ படம் தான் அதிக அளவில் தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டது. இப்பொழுது கூலி படம் அந்த ரெக்கார்டை பிரேக் செய்துள்ளது. அந்த அளவிற்கு கேரளாவில் கூலி படத்தை பிரமோஷன் செய்து ஹய்ப் ஏற்றி உள்ளனர். இந்த படத்தில் மம்முட்டியின் தளபதி படத்தின் கதாபாத்திரம் பெயரான தேவா தான் ரஜினியின் பெயர்
கேரளாவில் soubin shahirக்கு தனி ரசிகர் பட்டாலும் இருக்கிறார்கள். அதுவும் போக நாகர்ஜுனா மற்றும் உபேந்திரா இருப்பதால் அதிகளவு எதிர்பார்ப்பு அங்கே நிலவி வருகிறது. இருந்தாலும் இந்த நிலைமை இரண்டு வாரங்களுக்கு மட்டும்தான்.
மோகன்லால், பகத் பாஸில், துல்கர் சல்மான் படங்கள் 10 நாட்கள் கழித்து 28ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதுவும் போக இன்னும் இரண்டு மலையாள படங்கள் ரிலீசாக இருக்கிறது. மொத்தமாக ஐந்து படங்கள் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் கூலி ஆட்டம் 10 நாள் மட்டுமே.