அதிரடி சரவெடியாக வெளிவந்த கூலி டிரெய்லர்

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று தான் கூலி. விக்ரம், லியோ, மாஸ்டர் போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தான் இப்படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருடன் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கான், தெலுங்கு மாஸ் நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் செளபின் சாஹிர், இதுதவிர தமிழ் நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் என மல்டிஸ்டாரர் படமாக இந்த கூலி உருவாகி இருக்கிறது.
கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ள நிலையில், கூலி திரைப்படத்தின் மாஸான டிரெயிலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
(Visited 1 times, 1 visits today)