கூலி படத்தில் இணைந்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகர்
தளபதி விஜய்யை வைத்து, ‘லியோ’ படத்தை இயக்கி முடித்த கையோடு, லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றுவதை உறுதி செய்தார்.
இந்தப்படத்தின் பணிகள் இந்த ஆண்டு துவங்கிய நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே வெளியான தகவலின் படி இப்படத்தில் சத்யராஜ், கண்டன சூப்பர் ஸ்டார் உபேந்திரா, நடிகை ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன், ஷோபனா, உள்ளிட்ட பலர் நடிப்பது உறுதியாகி உள்ளது.
இவர்களை தவிர மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான, சௌபின் ஷாஹிர் இணைந்து நடித்து வருகிறார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தற்போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.