கூலி படத்தில் நடித்தது மிகப் பெரிய மிஸ்டேக் – கவலையில் சூப்பர் ஸ்டார்?

கூலி படத்தில் அமீர் கான் நடித்தது தவறு என அவர் கூறியதாக இணையத்தில் பரவும் செய்தி பொய்யானது. அதிகாரப்பூர்வ பதிவு எதுவும் இல்லை.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்தப் படம் கூலி.
தெலுங்கு மொழியின் உச்ச நட்சத்திரம் நாகார்ஜுனா, கன்னடாவின் உச்ச நட்சத்திரமான உபேந்திரா, மலையாள திரையுலகில் சமீபமாக பெரும் கவனம் பெற்றுவரும் நட்சத்திரமான சௌபின் ஷாஹிர், இந்தி திரைத்துறையில் இருந்து உச்ச நட்சத்திரம் அமீர் கான், தமிழில் சத்யராஜ் ஆகியோரை இந்தப் படத்திற்குள் அழைத்து வரப்பட்டனர்.
கைதி, விக்ரம் என தமிழ் சினிமாவில் பெரும் கவனம் பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படி பெரும் உச்ச நட்சத்திர பட்டாளங்களுடன் தயாரான கூலி படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வந்தது.
கலவையான விமர்சனம் பெற்ற இந்தப் படம் நேற்று (11ஆம் தேதி) அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்நிலையில், இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான், இந்தப் படத்தில் தான் நடித்தது பெரிய தவறு எனக் கருத்து தெரிவித்திருக்கிறார் எனும் ஒரு செய்தி இணையத்தில் வைரலாகிவருகிறது.
உண்மையில் அமீர் கான் இப்படியான ஒரு கருத்தை தெரிவித்ததாக எந்த இடத்திலும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. இதுவரை ஆய்வு செய்ததில் இது எடிட் செய்யப்பட்ட போலி செய்தியாகவே தெரிகிறது.
.