ஐரோப்பா

ஜெர்மனியில் முக்கிய இரகசியத்தை கசிய விட்ட நபரால் தொடரும் சர்ச்சை

எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெர்மனி நாட்டிற்கு வருகை புரிய இருக்கும் ஜெலஸ்கி தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டினுடைய அதிபர் ஜெலஸ்கி அவர்கள் எதிர் வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் ஜெர்மனி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதாவது ஒவ்வொரு வருடமும் ஹால்பிரைஸ் என்று சொல்லப்படுகின்ற ஜெர்மனி நாட்டினுடைய நிர்வாகத்தினால் வழங்கப்படுகின்ற சமாதானத்திற்கான கௌரவிப்பை பெற்றுக் கொள்வதற்காக இவர் ஜெர்மன் நாட்டிற்கு வரவுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

அதாவது இவர் பேர்ளினுடைய விமான படை தளத்தில் இறங்குவார் என்றும் இவருக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது.

மேலும் அவர் ஜெர்மனி அதிபரை சந்தித்து பேச்சு வார்த்தையை நடத்துவார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவரது பாதுகாப்பு அணுகு முறை தொடர்பாக மர்ம நபர் ஒருவர் பி எஸ் சைட் என்று சொல்லப்படுகின்ற செய்தி தாளுக்கு சில பாதுகாப்பு தரவுகளை வழங்கியுள்ளார் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது இதற்கு பொறுப்பான பிராந்திய பொலிஸார் இது சம்பந்தமான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து இருக்கின்றார்.

அதாவது இந்த தகவலை வெளியில் கசியவிட்ட விடயமானது சர்வதேசம் மற்றும் உள்ளுர் ரீதியில் ஜெர்மன் நாட்டுக்கு அப கீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்து இருக்கின்றார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்