ஸ்பெயினிலிருந்து சென்ற விமானத்தில் சர்ச்சை – 52 பயணிகள் யூதர்கள் என்பதால் வெளியேற்றம்?

ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரத்திலிருந்து பாரீஸிற்குப் புறப்பட இருந்த வூலிங் விமானத்தில் இருந்து, 44 குழந்தைகள் உட்பட 52 பயணிகள் வெளியேற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகள் அனைவரும் யூதர்கள் என்பதால், மத அடிப்படையிலான காரணத்தில் வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்தியொன்று வெளியாகிளது.
இந்தப் பின்னணியில், சம்பவம் தொடர்பாக வூலிங் நிறுவனம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயணிகளில் சிலர் விமான உள்நடப்புக்கு இடையூறும் வகையில் நடந்துகொண்டு, பணியாளர்களின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மீறியதுடன், அவசரகால உபகரணங்களை சேதப்படுத்தும் நிலையில் செயல்பட்டனர். இதனால், விமானக் கேப்டன் விமான நலன் கருதி அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்” என தெரிவித்துள்ளது.
மேலும், “இந்த நடவடிக்கை மத அடிப்படையிலோ, யாருடைய சமூக அடையாளங்களையோ மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவில்லை என்பதையும், அவ்வாறு கூறப்படுவது முற்றிலும் தவறானதாகும்” என்று வூலிங் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விமானப் பயணங்களில் பாதுகாப்பு நடைமுறைகளையும், பயணிகளின் ஒத்துழைப்புத் தேவையையும் மீண்டும் வலியுறுத்தும் வாய்ப்பாக இது உருவாகியுள்ளது.