சர்ச்சையில் சிக்கிய யூடியூப் பிரபலம்: நான் தற்கொலை செய்து கொண்டேன் என்றால் அது திட்டமிட்ட கொலையே!
யூடியூபரில் பிரபலமான TTF வாசன் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சென்ற கார் ஒருவர் மீது மோதியதில், அந்நபர் காயம் அடைந்தார். என செய்திகள் வெளிவந்தன.
TTF வாசன் அந்த இடத்தில் இருந்து ஆட்டோவில் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அதன்போது பொதுமக்களை வீடியோ எடுக்க விடாமல் தடுக்க முயன்றதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதுதொடர்பில் வாசன் ஒரு காணொளிப் பேட்டியில், “என்னை முடிந்தவரை துன்புறுத்துகிறார்கள், தர்மத்தை மீறுகிறார்கள். என்னுடைய புதிய படமான ‘மஞ்சள் வீரன்’ படத்தின் இயக்குனர் காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது, நான் அப்படிச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதுவும் மது போதையில். உண்மையில் நான் வாகனம் ஓட்டியிருந்தால் ஆம் என்று ஒப்புக்கொண்டிருப்பேன். ஆனால் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.”
“விபத்து நடந்தபோது, நான் அதிக வேகத்தில் சென்றதாகவும், விபத்துக்குப் பிறகு நான் ஆட்டோவில் தப்பிச் சென்றதாகவும் பலர் சொன்னார்கள். அவை அனைத்தும் தவறு. நாங்கள் சம்பவ இடத்தில் இருந்தோம் என்பதை சிசிடிவி காட்சிகளில் இருந்து கண்டுபிடிக்க முடியும்..
விபத்து.நடத்த இடத்திற்கு போலீஸ் வரும் வரை காத்திருந்தோம், விசாரணை முடிந்து மருத்துவமனைக்குச் சென்றோம்..
காரில் மோதி காயமடைந்த நபருக்கு உதவினோம்.
அனால் என்னை பற்றி வரும் செய்திகளை தாங்க முடியவில்லை. எதிர்காலத்தில் நான் தற்கொலை செய்து கொண்டேன் என்று ஒரு செய்தியைக் கேட்டால், அது தற்கொலை இல்லை அது திட்டமிட்ட கொலையென” தெரிவித்துள்ளார்.
மஞ்சள் வீரன்’ படத்தின் மூலம் டீடிஎஃப் வாசன் ஹீரோவாக அறிமுகமாகிறார். டாக்டர் கவிதா பிரியதர்ஷினி தயாரிக்கும் இப்படத்தில் கூல் சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.