நைஜர் நாட்டில் தொடரும் பதற்றம்! ஆளுங்கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்த கும்பல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு அதிபர் முகமது பாசும் தலைமையிலான அரசை கவிழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்களை துப்பாக்கி சூடு நடத்தி இராணுவம் விரட்டியடித்தது.
நைஜரில் அதிபர் முஹமத் பாஸுமை அதிகாரத்தில் இருந்து அகற்றி ஆட்சியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதால் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது.
நைஜீரியாவில் பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார சரிவு காரணமாக அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிபர் முகமது பாஸுமை அவரது பாதுகாவலர்களே சிறைபிடித்தனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் இராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் என கலவரம் நீடித்து வருவதால் நாடே பதற்றத்தில் உள்ளது.