இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி செல்லும் பயணங்களால் தொடரும் மரணங்ள் – 2 சடலங்கள் மீட்பு

பிரித்தானியா நோக்கி செல்ல முயற்சித்த இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் பிரான்ஸின் பா-து-கலே கடலில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இந்தவாரம் மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பா-து-கலே மாவட்டத்தின் Wissant நகர கடற்கரையில் ஒரு சடலமும், Sangatte நகர கடற்கரையில் இருந்து ஒரு சடலமும் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன..

குறித்த இரு சடலங்களும் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததாகவும், அவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 23 பிரித்தானியா நோக்கி பயணித்த படகில் பயணித்து பலியானவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த பயணத்தின் போது மூவர் உயிரிழந்ததாகவும், பலர் கடலில் மூழ்கி காணாம போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவரது சடலங்களே தற்போது கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்