நிபந்தனை காலம் முடிந்தது : ஈரான் மீது தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா!
ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான நேரம் முடிந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார்.
எதிர்காலத்தில் அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் முந்தைய தாக்குதல்களை விட “மிக மோசமானதாக” இருக்கும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
மத்திய கிழக்கு கடற்பகுதியில் ஆப்ரகாம் லிங்கன் போர் கப்பலை நிலைநிறுத்தியுள்ள நிலையில் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
இந்த அச்சுறுத்தல்கள் வெனிசுலாவுடனான முந்தைய சூழ்நிலைக்கு இணையாக இருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானில் பொருளாதார மந்த நிலையால் வெடித்த பரவலான போராட்டங்களில் 6000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டுள்ளது.
எந்தவொரு சாத்தியமான தாக்குதலும் முழு அளவிலான போராக கருதப்படும் என்றும், அதற்கு கனமான பதிலடி கொடுப்போம் என்றும் ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




