தனது விளம்பரதாரர்களை இழக்கும் X நிறுவனம் : சிக்கலில் மஸ்க்!

சமூக ஊடக நிறுவனமான X அதிக விளம்பரதாரர்கள் தப்பிச் செல்லும் வாய்ப்பை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வால்ட் டிஸ்னி மற்றும் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி, யூத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளையர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதாக பயனர் ஒருவர் தெரிவித்த கருத்திற்கு மஸ்க் ஆதரவாக கருத்து வெளியிட்ட நிலையில், மேற்படி சிக்கலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக நிகழ்வொன்றில் பேசிய வால்ட் டிஸ்னியின் CEO Bob Iger, X உடனான தொடர்பு “எங்களுக்கு சாதகமாக இல்லை” எனக் கூறியிருந்தமை சுட்டிக்காட்டதக்கது.
(Visited 10 times, 1 visits today)