கார்த்தியுடன் வடிவேலு இணையும் புதிய படம் – மாமன்னன் காட்டில் மழை தான்
நடிகர் வடிவேலு ஹீரோயிசம் கேரக்டரில் இருந்து வெளியேறி, மீண்டும் காமெடி நடிகராக மாறிய பின்னர், பட வாய்ப்புகள் அவருக்கு குவியத் துவங்கியுள்ளது.
அதன்படி தற்போது ‘பொன்னியின் செல்வன்’ பட நடிகருடன் காமெடி ரோலில் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மாமன்னன் படம் வடிவேலுவுக்கு நல்ல வரவேற்பையும் சிறந்த குணசித்திர நடிகராகவும் இவரை பார்க்க வைத்தது.
இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். இதில் வடிவேலுவின் காமெடி பெரிதாக எடுபடவில்லை.
தற்போது ‘மாரீசன்’ மற்றும் ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கூடிய விரைவில் இந்த படங்கள் வெளியாக உள்ளதாக, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து நடிகர் வடிவேலு நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி வடிவேலு தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வரும் கார்த்தி, இந்த படத்தை தொடர்ந்து நடிக்க உள்ள 29 வது படத்தில் வடிவேலு முக்கிய ரோலில் நடிக்க உள்ளாராம்.
இந்த படத்தை டாணாக்காரன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தமிழ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.