சருமத்தை பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய்!
குளிர்காலம் வந்துவிட்டது. மற்ற நேரங்களை விட குளிர்காலங்களில் சருமத்தை அதிகமாக பாதிக்கும். இந்த காலகட்டத்தில் சரும பராமரிப்பு மிகவும் அவசியமாகும். இந்நிலையில், இரவில் தூங்கும் முன் தேங்காய் எண்ணெய் சருமத்தில் தடவி வர சருமம் பொலிவு பெறும்.
தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்போம்.
சருமத்தில் உள்ள ஈரப்பதமும், வழவழப்புத் தன்மையும் நிலைத்திருக்கும். இதனால் மென்மையான சருமத்தைப் பெறலாம். இதில் உள்ள வைட்டமின் F, லினோலெயிக் ஆசிட் சருமத்திற்கு நல்ல பலனை அளிக்கும்.
லாரிக் ஆசிட் ஆண்டி ஆக்ஸிடன் கொண்டதால் முகத்தில் பூஞ்சைகள், அழுக்குகள் இருந்தாலும் அழித்துவிடும். இரவில் இந்த லாரிக் ஆசிடின் ஆற்றல் அதிகம் என்பதால் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் முகத்தில் எரிச்சல் , கருந்திட்டுகள் மறையும். கொலாஜின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு என்பதால் எப்போதும் இளமையான சரும அழகைக் கொண்டிருப்பீர்கள். சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், தோல் சுருக்கம் போன்றவற்றிற்கு தேங்காய் எண்ணெய் நல்ல பலனை தரும்.