காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கிற்கு ஆறுமாத சிறை தண்டனை?
ஸ்வீடிஷ் காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கிற்கு ஆறுமாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜுன் மாதம் மால்மோ நகரில், டா டில்பாகா ஃப்ராம்டைடன் (Ta tillbaka framtiden) என்ற குழு ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், காவல்நிலைய அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன் நிமித்தமாக கிரேட்டா துன்பெர்க்கிற்கு அபராதம், அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம் என வழக்குறைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தின்போது எதிர்ப்பாளர்கள் புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு எதிராக மால்மோ துறைமுகத்தின் நுழைவாயிலைத் தடுக்கவும் வெளியேறவும் முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கிரேட்டா துன்பெர்க், “நாங்கள் பார்வையாளர்களாக இருக்க வேண்டாம். அதற்கு பதிலாக புதைபடிவ எரிபொருள் உள்கட்டமைப்பை உடல் ரீதியாக நிறுத்துகிறோம். இதற்காக எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றன. நாங்கள் எதிர்காலத்தை மீட்டெடுக்கிறோம்” எனப் பதிவிட்டிருந்தார்.
இது குறித்த வழக்கு மால்மோ மாவட்ட நீதிமன்றத்தில் இம்மாத இறுதியில் ஜுலையில்) இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.