இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்குப் பின்பு காசாவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல்; 27 பேர் பலி

காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அங்கு ஹமாஸ் அமைப்புக்கும் ஆயுதமேந்திய மற்றொரு குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு காசா நகரில் உள்ள டெல் அல்-ஹவா(Tell al-Hawa) பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஹமாஸ் வீரர்கள் டக்முஷ் என்ற ஆயுதக் குழுவினர் பதுங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி வளைத்துத் தாக்க முயன்றபோது மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சண்டையில் 8 ஹமாஸ் போராளிகளும் எதிர்த்தரப்பில் 19 பேரும் உயிரிழந்தனர்.
மேலும் இந்த மோதலில் சலே அல்ஜஃபராவி(Saleh Aljafarawi) என்ற 28 வயது பத்திரிகையாளர் உயிரிழந்ததாக அல்ஜசீரா( Al Jazeera)தெரிவித்துள்ளது.
இரண்டு ஹமாஸ் போராளிகளைத் டக்முஷ் குழு கொன்றதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.