அல்லு அர்ஜுன்க்கு ஏற்ற கதாநாயகி தேர்வு – சிக்னல் கொடுத்த அட்லீ

அல்லு அர்ஜுன், கடைசியாக புஷ்பா 2 என்கிற மாஸ் வெற்றிப் படத்தை கொடுத்தவர்.
பெரிய எதிர்ப்பார்ப்பில் பல கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 1000 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்திற்கு பிறகு அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் அட்லீயுடன் இணைந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க படு பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி பெரிய எதிர்ப்பார்ப்பை தூண்டியது.
முதலில் இதில் நாயகியாக ஹாலிவுட்டில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார் என தகவல்கள் பரவ பின் அவர் தேதி காரணமாக முடியாது என்று கூறியுள்ளார்.
தற்போது இதில் ஜான்வி கபூர் நடிப்பது ஓரளவிற்கு உறுதியானது, மேலும் 2 நாயகிகளை படத்தில் கமிட் செய்ய அட்லீ மும்பையில் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த வருடத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டுமென்பதால் அதற்கு ஏற்றபடி கதாநாயகி தேர்வு இருக்கும் என சொல்லப்படுகிறது.