விக்ரமுக்கு ஜோடியாகும் விஜய்யின் நாயகி
தமிழ் சினிமாவில் உடலை வருத்தி, ரப்பர் போல் வளைத்து கொடுத்து கஸ்டப்பட்டு தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து, பிரபலமானவர் சியான் விக்ரம்.
கடைசியாக இவர் நடிப்பில், வெளியான ‘வீர தீர சூரன்’ கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதே போல் முதலுக்கு மோசம் இல்லாத லாபத்தையும் தயாரிப்பாளருக்கு பெற்று கொடுத்தது.
இதை தொடர்ந்து, விக்ரம் தற்போது தன்னுடைய 63-ஆவது படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க உள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

தற்போது வரை இந்த படத்தின் கதை, மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் அதிகார பூர்வமாக வெளியாகவில்லை.
ஆனால் இது“உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் குறித்து அடுத்தடுத்து சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக, ‘கோட்’ படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த மீனாட்சி செவுத்திரி நடிக்க உள்ளாராம்.






