பொழுதுபோக்கு

பெண்களிடம் அத்துமீறிய ஜான் விஜய்.. ஆதாரங்களை வெளியிட்ட சின்மயி

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியான நடித்து வரும் ஜான் விஜய் மீது, மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருக்கும் நிலையில், பாடகி சின்மயி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஜான் விஜய்க்கு எதிரான ஸ்கீரின் ஷாட்களை பதிவிட்டுள்ளார்.

ராவணன், அங்காடி தெரு, பலே பாண்டியா, தில்லாலங்கடி, வா, கோ, ஆண்மை தவறேல், வந்தான் வென்றான், சமர், டேவிட், நேரம், தீயா வேலை செய்யணும் குமாரு, பட்டத்து யானை, ஐந்து ஐந்து ஐந்து, வாயை மூடிப் பேசவும், திருடன்போலீஸ், வெள்ளைக்கார துரை, எனக்குள் ஒருவன், கோ2, கபாலி, சார்பட்டா பரம்பரை, பிச்சைக்காரன் 2 உள்ளிட்டப் பல தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ள ஜான் விஜய், தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மலையாள பெண் பத்திரிகையாளர் ஒருவர், ஜான் விஜய் நேர்காணலுக்காக காத்திருந்தபோது அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்தக்கொண்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், அவர் எப்போதுமே சென்னையில் உள்ள கிளப் மற்றும் பப்களுக்கு செல்வார். அங்கு வரும் பெண்களை அவர் தவறாக அணுகுவார். அவர்கள் நோ சொன்னாலும் அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வார். அவர் பிரபலமாக இருப்பதால், பெண்கள் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என நினைக்கிறார்.

அவரின் இந்த அணுகுமுறை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டே இருப்பார் என்று அந்த பெண் பத்திரிக்கையாளர் கூறியிருந்தார்.

இந்த தகவல்களை பாடகி சின்மயி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஸ்கீரின் ஷாட்டாக எடுத்து பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் இணையத்தில் பேசு பொருளாகி இருக்கும் நிலையில், ஜான் விஜய் இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார். இவர் மீது ஏற்கனவே 2018ம் ஆண்டு பல பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!