தைவானின் முக்கிய தீவுகளுக்குள் நுழைந்த சீனாவின் உளவு விமானம்!
தைவானின் வான்வெளியில் சீனாவின் உளவு விமானம் ஒன்று பறந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் சீனக் கடலின் வடக்குப் பகுதியில் உள்ள பிரதாஸ் (Pratas) தீவுகளுக்குள் குறித்த உளவு விமானம் பறந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீன கண்காணிப்பு விமானம் இன்று அதிகாலை 5.41 மணிக்கு பிரதாஸ் தீவுகளுக்குள் நுழைந்ததாகவும், குறித்த பகுதியில் 08 நிமிடங்கள் பறந்ததாகவும் தைவானின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் இந்த செயலை ஆத்திரமூட்டும் பொறுப்பற்ற செயல் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் விமர்சித்துள்ளது.
இத்தகைய மிகவும் ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகள் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன, சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறுகின்றன, மேலும் தவிர்க்க முடியாமல் கண்டிக்கப்படும்” என்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





