சீனாவில் 10G இணைய சேவை அறிமுகம்

உலகில் முதல் நாடாக 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த சேவையை ஹவாய் மற்றும் சீனா யூனிகாம் இணைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.
ஹுபே மாகாணம், சுனான் கவுண்டியில் கொண்டுவரப்பட்டுள்ள 10ஜி இணைய சேவை மூலம் 2 மணிநேரப் படத்தை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
9,834 எம்பிபிஎஸ் கோப்பை 3 மில்லி நொடிகளில் பதிவிறக்கம் செய்யவும், 1,008 எம்பிபிஎஸ் வேகத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஜி இணைய சேவையானது அதிநவீன 50ஜி பேசிவ் ஆப்டிகல் நெட்வொர்க் (Passive Optical Network) தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, கத்தாரின் அர்-ரயான் மீடியன் நகரத்தில் 618.53 எம்பிபிஎஸ் (6.8ஜி) வேகத்தில் பதிவிறக்கம் செய்வதே அதிகபட்ச வேகமாக இருந்தது. மேலும், அபிதாபில் கடந்த மாதம் 355 எம்பிபிஎஸ் வேக பிராட்பேண்டை அறிமுகம் செய்திருந்தனர்.
இந்த நிலையில், சீனாவில் மற்ற மாகாணங்களிலும் விரைவில் 10ஜி இணைய சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக் அறிவித்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை தற்போதுதான் நாடு முழுவதும் 5ஜி இணையசேவையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.