அதீத மன அழுத்தத்தால் இரவில் உறக்கத்தை தொலைக்கும் குழந்தைகள்!
குழந்தைகள் அதீத மன அழுத்தத்தின் காரணமாக இரவில் கண்விழிப்பதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
ஆறு முதல் 16 வயதுக்குட்பட்ட 1,000 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஐந்தில் ஒருவர் சராசரியாக ஒரு இரவில் எட்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே நித்திரை கொள்வதாக தெரியவந்துள்ளது.
10 பேரில் ஏழு பேர் (69 சதவீதம்) பள்ளியைப் பற்றி கவலைப்படுகிறார்கள், அதே சமயம் 54 சதவீதம் பேர் தங்கள் தோற்றத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். மேலும் 56 சதவீதம் பேர் தங்கள் எதிர்காலம் குறித்து கவலையுடன் உள்ளதாக அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
புத்தாண்டுக்காக பள்ளிக்கு திரும்பும்போது, வீட்டுப்பாடம் (31 சதவீதம்), சில பாடங்களைப் படிப்பது (31 சதவீதம்), தேர்வுகள் (30 சதவீதம்) ஆகியவை மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாகவும், மற்றவர்கள் நண்பர்களை உருவாக்குவது (23 சதவீதம்) மற்றும் பொருத்தம் (22 சதவீதம்) பற்றி கவலைப்படுவதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வனக் குளியல், ஜர்னலிங் மற்றும் யோகா போன்ற நடவடிக்கைகள் மூலம் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என அந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.