கமல், கௌதமி பிரிவுக்கு காரணம் என்ன? காலம் கடந்து வெளியாகும் உண்மைகள்…
கமல் மற்றும் கௌதமி பிரிவுக்கு முக்கிய காரணம் என்ன என்பதை செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
125க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கௌதமி, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தார்.
நடிகை கௌதமி அண்மைக் காலங்களாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கௌதமி சினிமா பின்புலம் இல்லாத சாதாரண பெண், திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது, தெலுங்கு இயக்குநர் ஒருவரின் கண்ணில்பட்டு சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனிக்கப்படும் நடிகையாக மாறிய கௌதமி ரஜினிகாந்துடன் குருசிஷ்யன் படத்தில் அறிமுகமாகினார். முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இதையடுத்து, 90கால கட்டத்தில் ரஜினி, ராமராஜன், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ரஜினியுடன் பல படத்தில் நடித்த கௌதமியை ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அண்ணி என்றே அழைத்தனர்.
அதன் பின் கமலுடன் சேர்ந்து அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இப்படி பீக்கில் இருந்த நேரத்தில் தான் கௌதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதில் இருந்து மீண்டு வந்த கௌதமி, யாருமே இல்லாமல் மன அழுத்தத்தில் இருந்தபோது, கமல், கௌதமிக்கு பல உதவிகளை செய்தார். இருவரும் ஒரே வீட்டில் இருந்தனர். இருவர் குறித்து வந்த பல கிசுகிசு செய்திகளை மற்றும் விமர்சனத்தை இரண்டு பேருமே கண்டுக்கொள்ளவில்லை.
ஆனால், திடீரென கௌதமி என் மகளின் படிப்புக்காக,என் மகளுக்காக இந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியேறுகிறேன் என்ற நாகரீகமாக ஒரு பதிவினைப்பகிர்ந்து விட்டு இருவரும் உறவை முறித்துக்கொண்டனர். ஆனால், சில ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் கண்ணு மூக்கு காது வைத்து எழுதுவதாக செய்யாறு பாலு அந்த பேட்டியில் கமல் கௌதமி பிரிவு குறித்து கூறியுள்ளார்.