கனடாவை அலங்கரித்த சக்குரா மலர்கள்

கனடாவின் டொரொன்ட்டோவை சக்குரா மலர்கள் அலங்கரித்துள்ளதாகவும் மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
High Park பூங்காவுக்கு வருவோரின் கண்களுக்கு நல்ல விருந்தாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
அந்தப் பூங்கா ஆயிரக்கணக்கான சக்குரா மலர்களின் இருப்பிடமாகியுள்ளது. ஜப்பான் அந்த அழகிய மலர்களை டொரொன்ட்டோவுக்குத் தந்தது.
1959ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 2,000 சக்குரா மரங்கள் கப்பல் வழியாக ஜப்பானிலிருந்து அங்குக் கொண்டுசெல்லப்பட்டன.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சக்குரா மலர்கள் பூக்கின்றன.
(Visited 14 times, 1 visits today)