ChatGPT வளர்ச்சி – கவலையில் ஸ்பெயின் – பிரான்ஸ்
உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து சலும் ChatGPT செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக இது தொடர்பில் ஆராயுமாறு ஸ்பெயின் தரவுகள் பாதுகாப்பு அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக் கண்காணிப்பு அமைப்பைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு, ஆய்வு நிறுவனம் உருவாக்கிய ChatGPT தொழில்நுட்பம் குறித்த கவலைகள் அதிகரித்துவருவது அதற்குக் காரணமாகும்.
தனியுரிமை விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் chatbot மீதான புகார்களைப் பிரான்ஸின் தனியுரிமைக் கண்காணிப்பு அமைப்பும் விசாரிக்கிறது.
இந்த நிலையில் இது தொடர்பில் இத்தாலியும் விசாரணைகளைத் தொடக்கியுள்ளது.
(Visited 4 times, 1 visits today)