அரசு நிறுவனங்களில் உள்ள உயர் பதவிகளில் மாற்றம்!
அரசு நிறுவனங்களில் உள்ள உயர் பதவிகளை மாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நியமனங்கள் குறித்த விவாதங்கள் ஏற்கனவே நடந்து வருவதாகவும், இந்த மறுசீரமைப்பில் பல்வேறு அரசு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள், குழுத் தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





