சீனப் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – ஆயுட்காலம் உயர்வு

சீனாவில் வாழும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
நாட்டின் சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகள், இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் வெளியான தரவுகளுக்கமைய, 2000ஆம் ஆண்டு ஒரு சீனப் பெண்ணின் சராசரி ஆயுட்காலம் 73.3 ஆண்டுகள் ஆக இருந்தது. அது தற்போது 80.9 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், 25 ஆண்டுகளில் 7.6 ஆண்டுகள் அல்லது 10.4 சதவீதம் என்ற அளவில் ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. இதுவொரு வலுவான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)