அறிந்திருக்க வேண்டியவை செய்தி

உலகின் சராசரி வெப்பநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலகின் சராசரி வெப்பநிலை விரைவில் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது உரையில்,

“கடந்த மே மாதம் உலகின் மிக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது.

கடந்த 12 மாதங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

அடுத்த 5 வருடங்களிற்குள் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸை கடப்பதற்கு 80 சதவீதம் வாய்ப்புள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய நாட்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் முழுவதும் நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

குறிப்பாக, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக இந்த வருடத்தில் மாத்திரம் 250ற்கும் அதிகமானோர் இந்தியாவில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!