பிரான்ஸில் ஏற்படவுள்ள மாற்றம் – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

பிரான்ஸில் சிறைத்தண்டனை வழங்குவதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, குறைந்த கால சிறைந்தண்டனை என்றாலும் அது முறையான சிறைத்தண்டனையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது கருத்துக்கு பொதுமக்களில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிறைத்தண்டனை வழங்கப்பட்டவர்கள் குறித்த கால த்துக்கு முன்பாகவே விடுவித்தல் அல்லது நிபந்தனைகளின் பேரில் விடுதலை செய்யப் படுவதும், சிறைத்தண்டனையை பிற்போடுவதும் என பல்வேறு சூழ்நிலைகள் காணப்படுகிறது.
அவை அனைத்தும் சீரமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பொது மக்களில் 67% சதவு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)