இந்தியா செய்தி

சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்படுகிறார். வரும் 22ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.

தொடர்ந்து, சந்திரபாடு நாயுடுவுக்கு ஜாமின் கோரி வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜாமின் மனு மீது விஜயவாடா லஞ்ச ஒழிப்ப குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறையை உறுதி செய்தது விஜயவாடா லஞ்ச ஒழிப்பு குற்றப்பிரிவு நீதிமன்றம்.

மனு தள்ளுபடி செய்ததன் மூலம் சந்திரபாபு நாயுடுவுக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி