அமெரிக்காவில் பாதசாரிகள் மீது மோதிய கார் – சம்பவ இடத்திலேயே மூவர் பலி!
லொஸ் ஏஞ்சல்ஸின் (Los Angeles) வெஸ்ட்வுட் (Westwood) பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 06 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் துரதிஷ்டவசமாக மேற்படி விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
காரை வயதான பெண் ஓட்டுனர் ஒருவர் செலுத்தியதாகவும், அவர் தற்போது விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





