சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கனடியர்
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மது அருந்திய நிலையில் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான கனேடியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் தகவலின்படி, 5ஆம் திகதி காலை சுமார் 9.20 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
பயண அனுமதிச் சீட்டையும், கடவுச்சீட்டையும் காண்பிக்குமாறு கோரிய போது, குடிவரவு அதிகாரிகளிடம் பலமுறை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் அதிகாரிகளின் எச்சரிக்கைகளை மீறி செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ஒருவர் மீது கனேடியர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதுடன், வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.





