உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கும் கனடா : வெளியான அறிவிப்பு!
ரஷ்யாவின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க கனடா முன்வந்துள்ளது.
கனடா $76 மில்லியனைச் செலுத்துகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார்.
பிளேயர் தனது ஜேர்மனியப் பிரதிநிதியான போரிஸ் பிஸ்டோரியஸுடன் இணைந்து கருத்து தெரிவிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பை எதிர்ப்பதில் நேச நாடுகள் தளராதவை என்று கூறினார்.
“இந்த பங்களிப்பின் மூலம், விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு மற்றும் அட்லாண்டிக் கடல்கடந்த கூட்டணியில் எங்களை வழிநடத்தும் மதிப்புகளுக்கு கனடா தனது உறுதியான அர்ப்பணிப்பை தெளிவாகக் காட்டுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)