வட அமெரிக்கா

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்கும் கனடா

உக்ரைன் தொடர்பில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கனடா தெரிவித்துள்ளது.

போரில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.லாட்வியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கொத்தணி குண்டு பயன்பாட்டை தடை செய்யும் சர்வதேச பிரகடனம் பின்பற்றப்பட வேண்டுமெனவும், அதனை கனடா முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை எதிர்க்கும் உலக நாடுகளின் வரிசையில் கனடா முன்னிலை வகிக்கின்றது.

Canada speaks out against cluster munitions after U.S. move | CTV News

இந்த பிரகடனம் உருவாக்கப்படும் போதும் கனடா பூரணமாக ஆதரவினை வெளியிட்டு வந்திருந்தது.போரின் போது பல்வேறு ஆயுத உதவிகள் வழங்கப்படுவதனை புரிந்து கொண்டுள்ளதாகவும், எனினும், கொத்தணி குண்டு பயன்பாட்டை அனுமதிக்கப்பட முடியாத எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு கொத்தணி குண்டுகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, உக்ரைன் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கத் தயங்கப் போவதில்லை என ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

(Visited 19 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content