கிரீன்லாந்திற்கு துருப்புக்களை அனுப்ப பரிசீலித்து வரும் கனடா!
நேட்டோ இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க கிரீன்லாந்திற்கு ஒரு சிறிய துருப்புக்களை அனுப்ப கனடா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவ அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கான திட்டங்களை அரசாங்கத்திடம் சமர்பித்துள்ளதாகவும், பிரதமர் மார்க் கார்னியின் ( Mark Carney) முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிரீன்லாந்தை கைப்பற்றுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகள் கடந்த வாரம் கிரீன்லாந்திற்கு சிறிய எண்ணிக்கையிலான இராணுவ வீரர்களை அனுப்பியிருந்தனர்.
இந்த ஆண்டு இறுதியில் துருப்புக்கள் பெரிய அளவிலான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





