கரும்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கலாமா?
கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்த பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன் என்றால் கரும்பில் சுண்ணாம்புச் சத்து என்ற கல்சியம் அதிகம் உள்ளது.
இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து இரசாயண மாற்றமடைகின்றது.
அந்த சமயத்தில் தண்ணீர் குடிக்கும் போது அதிகமாக சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது. இதனால் நாக்கு வெந்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கரும்பு சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் இருக்கிறது.
* கரும்பின் சாறில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் தொண்டைப் புண், வயிற்றுப்புண் குணமாகும்.
* கல்லீரல் நன்றாக செயல்படவும், செரிமானம் நன்றாக நடைபெறவும் கரும்பு பெரிதும் உதவுகிறது.
* கரும்பில் உள்ள பொலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக் கொன்று இணைந்து ஏற்படக் கூடிய ரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
* கரும்பை உண்டால் உங்களுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்துள்ளதால், வேலை ஆரம்பிப்பதற்கு முன் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல் திறன் அதிகரிக்கும்.
* கரும்பில் உள்ள கல்சியம் மற்றும் மக்னீசியம் எலும்பு மற்றும் பற்களை வலிமையாக்கும்.
* கரும்பு சாற்றில் தேன் கலந்து குடித்தால் ரத்த சோகை நோய் குறையும்.
* தேங்காய்ப்பாலுடன் கரும்புச் சாறு சேர்த்துப் பருக சீதபேதி குறையும்.
* கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர வாய் நாற்றம் குணமாகும்.