ஐரோப்பா

பிரான்ஸ் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

பிரான்சுக்குப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. பிரான்சுக்கு சுற்றுலா வருவோர், உள்ளூர் ஓட்டுநர் விதிகளை நன்கு அறிந்துவைத்திருப்பது நல்லது.

குறிப்பாக, வாகனம் ஓட்டுவோர், பிரான்சின் பன்னிரெண்டு நிரந்தர குறைந்த மாசு மண்டலங்களில், நடைமுறையில் உள்ள விதிகளின்படி நடந்துகொள்ளவேண்டும். விதி மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்ச அபராதத்தொகை 68 யூரோக்கள். இந்த தொகை மேலும் அதிகரிக்கலாம்.

வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முன் பக்கக் கண்ணாடியில், புகை வெளியீட்டு அளவைக் காட்டும், Crit’Air sticker என்னும் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டவேண்டும் அதன் விலை 4.61 யூரோக்கள் ஆகும்.

Crit Air Initiative Is Now In Effect In France Have You Got Your Sticker | Activa Contracts

பிரான்சில், பாரிஸ், Strasbourg, Lyon, Marseille, Toulouse, Nice, Montpellier, Grenoble, Rouen மற்றும் Reims ஆகிய நகரங்கள் குறைந்த மாசு மண்டலங்களில் அடங்கும்.நீங்கள் பிரான்சுக்குப் பயணம் செய்கிறீர்கள் என்றால், முன்கூட்டியே Crit’Air ஸ்டிக்கரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இன்னொரு முக்கிய விடயம், உங்கள் வாகனத்தில் ஸ்பீட் டிடெக்டர் இருந்தால், அதை பிரான்சுக்குள் நுழைவதற்கு முன் செயலிழக்கச் செய்துவிடவேண்டும். பிரான்சில் இந்த டிடெக்டர்களை பயன்படுத்தினால், உங்களுக்கு 1,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

See also  மாஸ்கோவில் ஒரே பாலின உறவுகளை ஊக்குவித்த நபர் கைது

மேலும், வாகனம் ஓட்டும்போது ஹெட்ஃபோன்களை அணிந்திருப்பது, வாகனம் பழுதடைந்து வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தியிருக்கும்போது ஒளிரும் உடையை அணியாமல் இருப்பது ஆகிய விடயங்களும் அபராதம் விதித்தலுக்கு வழிவகை செய்யும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

(Visited 22 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content