கின்னஸ் சாதனைகளை முறியடிக்க மக்களுக்கு அழைப்பு : தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும்போது, உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உலக சாதனைகளை முறியடித்து வருகின்றனர்.
ஆனால் கின்னஸ் உலக சாதனைகள் வீரர்களால் மாத்திரம் இன்றி உடல் உறுப்புகளை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறான நபர்களையும் கின்னஸ் குழுக்கள் தேடி வருகின்றனர்.
உலகின் மிக நீளமான நகங்கள் முதல், உயரமான பதின்ம வயதினர் வரை, மற்றும் மிகவும் நீளமான தோல் வரை, பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாத பல தனித்துவமான உலக சாதனைகள் உள்ளன.
சமீபத்தில் X தளத்தில் இடப்பட்ட பதிவில், கின்னஸ் உலக சாதனைகள் நீண்ட கால சாதனைகளை முறியடிக்க மக்களை அழைப்பதாக அறிவித்தது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.





