கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து விபத்து – பலர் படுகாயம்

கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 5 மற்றும் 6 மணிக்கு இடையில் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்தின் ஓட்டுநர் தூக்கத்தில் வேகமாக பயணித்ததால் கொடக்காவலை பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)