“ஹார்முஸ் நீரிணையில் இருந்து தப்பிய முதல் கப்பல்”
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் வெடித்தபோது ஹார்முஸ் நீரிணையில் சிக்கிக்கொண்ட ஜப்பானிய சரக்குக் கப்பல், அங்கிருந்து துணிச்சலாகத் தப்பித்து தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
துபாயில் சரக்குகளை இறக்கிவிட்டுத் திரும்பிய அயர்ன் மெய்டன் என்ற அந்த கப்பல், ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனது இருப்பிட சமிக்ஞைகளை அணைத்துவிட்டு நள்ளிரவில் மிகவும் சாதுரியமாகச் செயல்பட்டது.
இந்தப் போர்ச் சூழலில் இருந்து பத்திரமாக வெளியேறிய முதல் கப்பலாக இது கருதப்படுவதால் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக சீன உரிமையாளர் என்ற போலி அடையாளத்தைப் பயன்படுத்தி இக்கப்பல் தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.




